கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து வங்கதேசத்தை வீழ்த்தி T20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!

Date:

பங்களாதேசத்திற்கு எதிரான மூன்று டி 20 ஆட்டத்திலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மூன்று இருபதுக்கு 20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதலாவது டி 20 ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ( 19) இடம்பெற்றது . இதில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது டி 20 ஆட்டம் கடந்த சனிக்கிழமை (20) நடைபெற்றது இதில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.

இன்றைய தினம் ( 22) மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் டாக்காவில் இடம்பெற்றது.இதில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரரான முஹம்மத் நயீம் 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முகம்மத் வசீம் , உஸ்மான் காதீர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

125 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் தொடரை பாகிஸ்தான் அணி வசமானது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் கைதர் அலி 45(38), முஹம்மத் ரிஸ்வான் 40( 43) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது மஹ்முதுல்லாஹ் சிறப்பாக பந்து வீசி முதல் 3 பந்துகளுக்கு ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது இந்நிலையில் நவாஸினால் பெறப்பட்ட 4 ஓட்டத்துடன் போட்டி பாகிஸ்தான் வசமானது.போட்டி நாயகனாக கைதர் அலி மற்றும் தொடர் நாயகனாக முஹம்மத் ரிஸ்வான் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...