கம்பஹா மாவட்டத்தில் பத்திக் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

Date:

(ரிஹ்மி ஹக்கீம்)

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியிலுள்ள வானலுவாவ பிரதேசத்தில் பத்திக் பயிற்சி நிலையம் ஒன்று நேற்றைய தினம் (09) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டமானது தொம்பே பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜயதிஸ்ஸவின் பூரண மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற பிரதேசத்தை சேர்ந்த 25 பெண்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக, தொம்பே பிரதேச சபை தவிசாளர் பியசேன காரியப்பெரும உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தொம்பே பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...