குவைத் நாட்டின் Islamic care society இன் அனுசரணையில், கஹட்டோவிட்ட அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் பராமரிப்புக்கு மிக முக்கியமான தேவையாக காணப்பட்ட திரவ ஒக்சிசன் தேவைப்பாட்டை வைத்தியசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க 90இலட்சம் பெறுமதியான 3000லீட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஒக்சிசன் தாங்கியை கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலப் எம் புதைர் அவர்கள் அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் இந்த திரவ ஒக்சிசன் தாங்கி கையளிப்பை அல் ஹிமா இஸ்லாமிய சேவை நிறுவனத்தின் தலைவர் அல் ஹாஜ் நூருள்ளாஹ் அவர்களால் வைத்தியசாலை நிர்வாகத்தின் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் சுப்ரீண்டன் எம் சிராஜ் அவர்களிப்பதையும் விசேட அதிதிகளை வரவேற்பதையும் , கையளிப்பு நிகழ்வில் அதிதிகள் உரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.