கொலம்பியாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.அந் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மல்லாமாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது .இந் நிலையில் தீடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டு 12 பேர் பலியாகியுள்ளனர்.
கொலம்பியாவில் மலைகள் சூழ்ந்த மல்லாமா உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை அழித்து ஆபத்தான முறையில் வீடுகள் கட்டப்பட்டு வருவதால் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.