கொழும்பு நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ட்ரேன் கெமரா ஊடாக எதிர்வரும் வாரத்தில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.