சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்யும் போது அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களை வாங்குவது கட்டாயமில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று முதல் அமுலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனியை மாத்திரம் கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.