எதிர்வரும் 6 நாட்களுக்குள் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு ஏற்படுமென லிட்ரோ நிறுவனம் இன்று (19) அறிவித்துள்ளது.
அரசு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவின் பணிப்பாளர் ஜானக்க பத்திரன தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த நிலை சீராகும் எனவும் சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எந்த குறைபாடும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 6 நாட்களுக்குள் அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் குறித்த தொகையை வழங்கக் கூடியதாக இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.