நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நாளை மறுதினம் (08) முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தரம் 10,11 ,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கொவிட் 19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.தரம் 6 முதல் 9 வரையான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50% மாணவர்களுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்னவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக்கு அமைவாகவே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.