சியாரா லியோனில் எண்ணெய் தாங்கி வெடித்ததில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான ப்ரீடவுனில் எண்ணெய் தாங்கி ஒன்று மற்றொரு வாகனம் மீது மோதியதை தொடர்ந்து வெடித்தது.
இதில் 92 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு உறுதி செய்யவில்லை.அதேநேரத்தில் 91 சடலங்கள் வந்துள்ளதாக பிணவறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.எண்ணெய் தாங்கி மோதியதை தொடர்ந்து அதிலிருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்க மக்கள் கூடிய போது அப்போது எண்ணெய் தாங்கி வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாங்கி வெடித்ததால் அருகில் இருந்த கடைகள் மற்றும் கட்டடங்களில் தீ பரவி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
காயமடைந்தவர்கள்அந் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது