தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்-உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

Date:

ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொவிட் வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொவிட் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொவிட் பாதிப்பைக் கண்டறிதல், பொது சுகாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது, கொவிட் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும், விழாக்கள், கொண்டாட்டங்கள் அனைத்தும், கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும், அதிகமானோர் ஓரிடத்தில் ஒன்று சேருவது, பெரிய அளவில் கூட்டங்கள் நடத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.நாம் எந்த நிலையிலும் நமது பாதுகாப்பை இல்லாது செய்யக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தென் – கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர்டொக்டர் பூணம் கேத்ராபால் சிங் தெரிவித்துள்ளார்.

புதிய வகை வைரஸ் என்றாலும் அவற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வழிமுறை பழைய முறையாகவே உள்ளது. அதற்காக முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். கூட்டமான இடங்களைத் தவிர்த்துவிடுங்கள், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...