நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை | ஞானசார தேரர்

Date:

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், சட்டத்திற்கான வேலைத்திட்டத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன்  இருப்பதாகவும், இன்று பல விமர்சகர்கள் தான் இச்செயலணியின் தலைவர் என குறிப்பிடுகின்றார்களே தவிர, இந்த நாட்டில் தனி சட்டம் உள்ளதா இல்லையா என எவரும் கருத்து தெரிவிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து யாரும் பேசுவதில்லை எனவும், பல்வேறு மாகாணங்களிலும், மதங்களிலும் பல்வேறு சட்டங்கள் உள்ளதாகவும், அவ்வாறான தீர்மானங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் ஆரம்பத்திலேயே அதில் உள்ள குறைபாடுகளைக் கூறி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் முதலில் அதன் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இலங்கையர்கள் என்ற இனம் மாத்திரமே இருப்பதாகவும், இன ரீதியாக யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முழுமையான காணொளிக்கு 👇

https://fb.watch/8-mO1buq9H/

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...