நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்து, ஒருவர் காணமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.