நாட்டை மீண்டும் முடக்கும் தீர்மானம் அரசாங்கத்திற்கு இல்லை!

Date:

நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித எண்ணமும் இல்லை.எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிகவும் வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் மிகவும் கஷ்டத்துடன் அமுல்படுத்தியது. அதன் பின் நாடு திறக்கப்பட்டாலும் நாட்டில் இந் நோய் முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை மேலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். சிறு வயதினர்களளுக்கு கூட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக நாம் யாரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது என்றும், அத்துடன், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்கள் தமது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். தமது பிள்ளைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சுகாதாரத் துறையினரால் மீண்டும்  வலியுறுத்தும் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி செயற்படுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அண்மையில் பதிவாகிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபினால் உலகில் ஆபத்தான சூழ்நிலையொன்று மீண்டும் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் காலம் தாழ்த்தாது, விரைவில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள். மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை நம் அனைவரின் விவேகமான மற்றும் பாதுகாப்பான நடத்தையில் தங்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...