நீர் கட்டணத்தில் மாற்றம் இல்லை- தேசிய நீர் வடிகாலமைப்பு சபை!

Date:

எதிர்வரும் ஆண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.எனினும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செலவீனம் வருமானத்தை விட அதிகரித்துள்ளமையினால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாவிட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க நேற்று ( 20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில் நாட்டின் 45 % மக்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.அடுத்த 4 வருடங்களுக்குள் அதனை 80% அதிகரிப்பதே தமது இலக்கு என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...