நைஜீரியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 21 மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லாகோஸ் நகரில் Fourscore Homes என்ற தனியார் நிறுவனத்தின் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.சரிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.