சீரற்ற காலநிலை காரணமாக எல்ல- பசறை பிரதான வீதியின் 16 வது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள பாறைகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ,வாகன சாரதிகள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் குறித்த அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.