பண்டாரவளையில் சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
தொற்றுறுதியானவர்களில் 18 சிறுவர்களும் 6 பணியாளர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந் நிலையில் கொவிட் உறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு இன்றைய தினம் கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.