கடந்த வருடத்தில் நாட்டின் பதிவுத் திருமணங்களின் எண்ணிகை வீதம் குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றதாகவும் கடந்த வருடத்தில் இத் தொகை 1 இலட்சத்து 43 ஆயிரத்து 61 ஆகக் குறைவடைந்திருப்பதாக குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)