அப்ரா அன்ஸார்.
ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் மெதிவ் ஹேடன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவரான ரமீஸ் ராஜாவின் அதிரடி முடிவிலே இம் மாற்றம் ஏற்பட்டது.
இருபதுக்கு இருபது தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி குழு 2 இல் முதலாவது அரையிறுதிக்கு முன்னேறிய அணியாகவும் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அணியாகவும் இருக்கின்றது.
இது இவ்வாறிருக்க பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான மெதிவ் ஹேடன் அணி வீரர்களை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடத்தில் வேறு எந்த அணியிலும் காணாத ஒற்றுமையையும், ஆன்மீக பிணைப்பையும் தான் அவதானித்ததாக அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரான மெதிவ் ஹேடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாகிஸ்தான் அணியிடம் காணப்படுகின்ற ஆன்மீக ஒற்றுமையானது தன்னை ஈர்த்திருப்பதாகவும் , அவர்கள் அனைவரும் இணைந்து தொழுகை நடாத்துகின்றார்கள்.நாளாந்தம் அவர்களுக்கிடையே தொழுகை மூலமாக ஒற்றுமையையும் , ஒழுக்கத்தையும் வேறு எங்கும் காணமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓய்வு அறையில் கூட பாகிஸ்தான் வீரர்களிடம் காணப்படுகின்ற ஒழுக்கத்தை வேறு எந்த அணியிலும் நான் காணவில்லை,கடந்த 5 வாரங்களாக ஒரே அறையில் இருந்து வருகிறேன் அவர்கள் மத்தியில் காணப்படுகின்ற ஒழுக்கம் மிகச் சிறந்ததாகும்.
அவர்களிடம் காணப்படுகின்ற இவ்வாறான ஒழுக்கமும் , தொழுகை மூலமான ஆன்மீக ஒற்றுமை தன்னை ஈர்த்திருப்பதாகவும் இது அவர்களுடைய வெற்றிக்கு வழிவகுப்பதாகவும் , அவர்களுடைய தொழுகையை கண்டு நான் கூடுதலான முறையில் ஈர்க்கப்பட்டுள்ளேன் எனவும் இந்த ஒற்றுமையையும் , ஆன்மீகப் பற்றும் என்றும் நிலவ வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் என பயிற்சிவிப்பாளர் மெதிவ் ஹேடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.