அன்பு அண்ணனே! உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
சிறு பராயத்திலிருந்தே, உங்களோடு கூடவே வளர்ந்த எங்களுக்கு – உங்களின் மனிதாபிமானம் ஒரு வியப்பான விடயமல்ல!
இலட்சக்கணக்கான எமது மக்கள் உங்கள் மீது கொண்டிருக்கும் பேரன்புக்கும் பெரும் மரியாதைக்கும் அடிப்படை –
அவர்கள்பால் நீங்கள் கொண்டிருக்கும் அதே மனிதாபிமானமும் அவர்களுக்காக நீங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் உயர் தொண்டும்தான் என்பதும் ஓர் ஆச்சரியமான விடயம் அல்ல.
இத்தகைய மகிமைகள் கொண்ட ஓர் உத்தம புருஷரால் வழிகாட்டப்பட்ட நான், ஒரு பெரும் மகா பாக்கியவான் என்பதும் ஓர் ஐயத்துக்குரிய விடயம் அல்ல.
இலங்கை அரசியலிலும் எமது நாட்டு மக்களது வாழ்விலும் அழியாத ஓர் வரலாற்றுத் தடம் பதித்திருக்கும் மாண்புமிகு போராளி நீங்கள்!
எனது பாசம் மிகுந்த சகோதரர்!
இறை அருளும் நல்லாசிகளும் பெற்று – எம்மோடு இன்னும் பல்லாண்டுகள் கூடவே இருந்து, எம்மையும் எமது நாட்டு மக்கள் அனைவரையும் நீங்கள் தொடர்ந்து வழிப்படுத்த வேண்டும்!
#கோட்டாபயராஜபக்ஷ