இன்று (11) கொழும்பு − கோட்டை மற்றும் பொல்கஹவெல்ல பிரதான மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும், புகையிரத சமிக்ஞை கோளாறு காரணமாகவே இந்த புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தடைப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே, இவ்வாறு புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளது.