நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இரவு நேர அஞ்சல் புகையிரதம் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் புகையிரத சேவைகளுடன் ,குறுந்தூர புகையிரத சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்