நாடு முழுவதும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக புத்தளம் நகரம் நீரினால் மூழ்கியுள்ளது.புத்தளம் பகுதியிலுள்ள சில வீதிகள் சுமார் 2km தூரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை புத்தளம் – குருநாகல் வீதி அரலி உயன, இரண்டாம் கட்டை, தம்பப்பண்ணி ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே மேற்படி வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அவ் வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளில் பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.