பெண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்துள்ளார்.
பெண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன் அண்மையில் கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இரண்டு தடவைகள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
உலகில் உள்ள பெரும் புள்ளிகளின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான இரகசிய தகவல்களை வெளிப்படுத்திய பெண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.