நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,770 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 498 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 542137 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.