கேகாலை மாவட்டம் ரம்புக்கனை தொம்பேமட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை (09) அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் இன்னுமொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதாவது 36 வயதுடைய தாய் , 8 வயதான மகள், உறவின 13 வயது சிறுமியொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.