ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் பரவலால் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை ஏனெனில் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஒரேயோல் Oryol உள்ளிட்ட நகரங்களில் ஒக்சிஜன் மற்றும் கட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளின் வாசலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், அதனால் அம்புலன்ஸ் வாகனத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பல மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.