வாக்காளர் இடாப்பில் இதுவரையில் பெயர் பதியாதவர்களுக்கான விசேட அறிவிப்பு!

Date:

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த தேர்தலை நடத்துவதற்கான உள்ளுராட்சி மன்றங்களின் யாப்பு ரீதியிலான பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் (2022) பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.எனவே, உரிய படிவங்கள், அலுவலர்கள் மற்றும் வாகனங்கள் கணக்கெடுப்பு, வாக்களிப்பு நிலையங்களை கண்டறிந்து அவற்றின் குறைபாடுகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு, மாவட்ட துணை மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு (2021) வாக்காளர் டாப்பில் பெயரை பதிவு செய்யாதவர்கள், அது தொடர்பான தகவல்களை டிசம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...