விராட் கோலியின் குழந்தைக்கு பாலியல் அச்சுறுத்தல் – இன்சமாம் உல் ஹக் கண்டனம்!

Date:

அப்ரா அன்ஸார்.

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் டுபாயில் இடம்பெற்று வருகிறது.குழு இரண்டில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் கடந்த 24 ஆம் திகதி மோதின.இப் போட்டி முழு உலக கிரிக்கெட் இரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகும்.கிரிக்கெட் வரலாற்றில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வந்தது இந்தியா எனினும் அன்றைய போட்டி பல்வேறு திருப்புமுனைகளை கொண்டமைந்தது.இப் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . அதன் பின்னர் இந்திய அணி இரிகர்களாலும் ,இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களாலும் விமர்சிக்கப்பட்டு வந்தனர்.பின்னர்

இந்தியா சந்தித்த இரண்டாவது போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது இந்திய அணியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது எனவே நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் களமிறங்கியது இந்திய அணி . அழுத்தத்திலேயே சரியாக ஆடாமல் படுதோல்வி அடைந்தது. துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என எதிலும் இந்திய அணி முறையாக செயற்படவில்லை. களத்தில் இந்திய அணியின் உடல்மொழியே சரியில்லை என்பதை அணியின் தலைவர் விராட் கோலி போட்டிக்கு பின்னர் ஒப்புக்கொண்டார்.

இந் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின்னர், மனிதத்தன்மையற்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.இது இந்தியாவில் புதிதான விடயமல்ல என்பது முழு உலக மக்களும் அறிந்ததே.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியை அடுத்து, இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் பத்து மாத பெண் குழந்தை வாமிகாவுக்கு இந்திய இரசிகர்களால் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனித்தன்மையற்ற செயலை பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் உரையாற்றுகையில் ,

“விராட் கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். கோலியின் ஆட்டத்தையோ அல்லது தலைமைத்துவத்தையோ விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

“கோலியின் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுப்பவர்கள், இது வெறும் விளையாட்டுத்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதற்காக இப்படியெல்லாம் செய்வது மனதை காயப்படுத்துகிறது” என்று மேலும் தெரிவித்தார்.

விளையாட்டை சிலர் பொழுதுபோக்காகவும்,சிலர் வாழ்க்கையாகவும் பார்க்கின்றனர்.எனினும் தான் தேசத்தின் மேல் மிகுந்த பற்றுடையவர்கள் என்பதை உணர்த்த சிலர் தவறான வழிகளை கையாள்வது தண்டிக்கப்பட வேண்டும்.கிரிக்கெட் போட்டியின் வெற்றியின் போது அதனை கொண்டாடுவது ஒவ்வொரு தனிமனித சுதந்திரம் எனினும் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது . இவ்வாறு செய்வது தான் தேசத்தின் மீதுள்ள பற்றினால் தான் என்பதை அவர்கள் மூடத்தனமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...