வெலிசர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது இளைஞன் மற்றும் அவரது தந்தை ஆகியோரை நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு வாகனம் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.