21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திரக் கிரகணம் இன்னும் இரு வாரத்தில்; நாசா அறிவிப்பு!

Date:

பூரண சந்திரக் கிரகணத்துக்கு ஒத்ததாக நீண்ட சந்திர கிரகணமொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நிகழவுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது மூன்று மணித்தியாலம் 28 நிமிடங்கள் 23 வினாடிகள் நீடிக்கும் என்றும் இது 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.இதன் போது நிலவின் மேற்பரப்பு 97 சதவீதம் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும்.குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்துக்கு இது தென்படும் என்றும் 2100 ஆம் ஆண்டு வரை மீண்டும் இவ்வாறானதொரு நீண்ட சந்திரக் கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா கணித்துள்ளது.

எதிர்வரும் எட்டு தசாப்தங்களில் மேலும் 179 சந்திர கிரகணங்களில் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் , சராசரியாக வருடமொன்றில் இரண்டு சந்திரக் கிரகணங்கள் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 19 ஆம் திகதி இவ் வருடத்துக்கான சந்திர கிரகணம் நிகழும் நிலையில் அடுத்த வருடம் மே 16 ஆம் திகதி மற்றுமொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...