24 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி!

Date:

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி அடுத்த வருடம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.24 வருடங்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் , 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டிகள் இடம்பெற தீர்மானித்துள்ளது.இப் போட்டிகள் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாஹுர் ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி பாகிஸ்தான் அணியுடனான தொடரை முதலாவது போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் நியூசிலாந்து அணி தொடரை கைவிட்டு நாடு திரும்பியிருந்தனர்.அத்தோடு இங்கிலாந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முற்றாக கைவிட்டனர்.

தற்போது இடம்பெற்று வரும் ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அணியாகவும் சூப்பர் 12 சுற்றில் அனைத்து போட்டிகளையும் வென்று அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...