28 ஆம் திகதி முதல் அறநெறி பாடசாலைகளை திறக்க ஆலோசனை

Date:

நாட்டில் கொவிட் 19 வைரஸின் ஆதிக்கம் குறைவடைந்துள்ள நிலையில் இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளும் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகளின் 6,7,8 மற்றும் 9 தரங்களுக்காக கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...