நாட்டில் 73 நீர்த்தேக்கங்களில் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80% உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது இராஜங்கனை, அங்கமுவ, தெதுரு ஓயா, தப்போவ மற்றும் வெஹரகல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர், பொறியியலாளர் அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.