44 நாடுகள் பங்குபற்றிய International Global Virtual Championship 2021 Karate போட்டியில் கஹட்டோவிட்டவில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 04 பதக்கங்கள்!

Date:

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக, முழு உலகத்தையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கி கொண்டிருக்கும் Corona Virus பரவலின் காரணமாக எமது நாட்டிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும், மாணவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளும் ஒரே இடத்தில் முடங்கியிருந்தன.
அதே போல, கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் பிரத்தியேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த Karate வகுப்பும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் சுமார் 44 நாடுகள் பங்குபற்றிய International Global Virtual Championship 2021 Karate சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பிரத்தியேக வகுப்பில் பங்குபற்றிய மாணவர்கள் நான்கு பதக்கங்களை வென்றிருக்கின்றார்கள்.
கஹட்டோவிட்டவை சேர்ந்த எம்.என்.அம்ஜத் வெள்ளிப் பதக்கத்தையும் எப்.ஏ.ஹம்தி மற்றும் ஓகொடபொல பிரதேசத்தை சேர்ந்த எம்.ஆர்.எம்.ஸாயித், உடுகொடையை சேர்ந்த ஸிஹான் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் : பயிற்றுவிப்பாளர் ரம்ஸான்
(ரிஹ்மி ஹக்கீம்)

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...