60 வயதுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாரஹேனபிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.இத் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.