ICC இன் தலைமை நிர்வாகியாக ஜெப் அலார்டைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ICC இன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்த மனு சவ்னி ஐசிசி யின் ஒழுக்காற்று விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக அப் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதை அடுத்து அந்த இடத்துக்கு அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஜெப் அலார்டைஸ் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த நிலையில் நிரந்தர தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்த நிலையில் நிரந்தர தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக நேற்று (21) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.