T20 Highlights: பங்களாதேஷுடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 30 வது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 84 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் நயீம் 9, லிடன்தாஸ் 24, சமீம் குசைன் 11 ,மஹ்தி ஹசன் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.ஏனைய வீரர்கள் பெரிதளவில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.

தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சில் ரபாடா மற்றும் நோர்டிஜ் தலா 3 விக்கெட்டுகளையும் சம்ஸி 2 , பிரிடோரியஸ் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.85 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் பவுமா 31, ரஸ்ஸி வன் டர் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பங்களாதேஷ்அணியின் பந்துவீச்சில் டஸ்கின் அஹ்மத் 2 , மஹ்தி ஹசன் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...