ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 35 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.இப் போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஸலங்க 68 ,நிஸ்ஸங்க 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
மே.தீவுகள் அணியின் பந்து வீச்சில் ரஸல் 2(33), பிராவோ 1(42) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மே.தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
மே.தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் ஸிம்ரோன் 81(54), பூராண் 46(34) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2(19), சமிக கருணாரட்ன 2( 43) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.