T20 Highlights: “சூப்பர் 12” சுற்றின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12 இன்” 33 வது போட்டியாக இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப் போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 2010 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோகித் சர்மா 74(47), கே.எல் ராகுல் 69(48) ,ஹார்திக் பாண்டியா 35(13) ,ரிசப் பான்ட் 27(13) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் குல்பதீன் மற்றும் கரீம் ஜன்னத் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

211 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக கரீம் ஜன்னத் 42(22), முஹம்மத் நபி 35( 32) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் முஹம்மத் சமி 3 (32) , அஸ்வின் 2(14) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

சூப்பர் 12 இல் மூன்று போட்டிகளில் விளையாடிய இந்தியா இரண்டு போட்டிகளில் படு தோல்வியடைந்தது.இவ் வெற்றியோடு முதலாவது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.எனினும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பெருமளவில் இந்தியாவுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...