ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 29 வது போட்டியாக இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஜோஸ் பட்லர் 101 , மோர்கன் 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 3(21), துஷ்மந்த சமீர 1 (43) விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
164 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் வனிந்து ஹசரங்க 34 , தசுன் சானக்க 26 , பானுக 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் மொயின் அலி 2(15) , ஆதில் ரசீத் 2(19) , க்றிஸ் ஜோர்டான் 2(24) விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 101 (67) தெரிவானார்.
இவ் வெற்றியுடன் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதோடு இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு கனவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.