ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் ‘சூப்பர் 12″ இன்” 37 வது போட்டியாக இந்திய மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 17.4 ஓவர்கள் முடிவில் 85 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் முன்ஸே 24, லஸ்க் 21 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சில் ஜடேஜா மற்றும் சமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.86 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் கே .எல் ராகுல் 50 , ரோஹித் சர்மா 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் மார்ச் வட் மற்றும் பிரட்லி வீல் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இந்திய அணி இப் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அட்டவணையில் 4 புள்ளிகளுடன் காணப்படுகின்றது.இந்திய அணியின் சூப்பர் 12 சுற்றின் இறுதிப் போட்டி நமீபியாவுக்கு எதிராக இருக்கின்றது அதில் இந்தியா வெற்றி பெற்றாலும் கூட ஆப்கானிஸ்தான் நியூசிலாந்திடம் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இந்தியா அரையிறுதி வாய்ப்பை முற்றாக இழந்து நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
இரு குழுவிலும் இரண்டாவது எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற குழப்பம் கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.எது எவ்வாறாயினும் இந்திய அணி ஆப்கானின் வெற்றியில் தங்கியிருக்கும் வகையில் போட்டி சூழ்நிலை அமைந்துள்ளது .