ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 32 வது போட்டியாக ஸ்கொட்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மார்டின் கப்டில் 96 (56) , கிலேன் பிலிப்ஸ் 33(37) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் ஸப்யான் சரீப் 2(28) மற்றும் வீல் 2(40) தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
173 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் மிச்சேல் லீஸ்க் 42(20) , மெதிவ் குரஸ் 27(29) ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ட்ரன்ட் போல்ட் 2(29)மற்றும் இஸ் சோதி 2(42) தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.