T20 Semi Highlights: T20 வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இன்று (10) இடம்பெற்றது .இப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மொயின் அலி 51(37) , மாலன் 41(30) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸொவ்தி ,மய்ல்ஸ மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

167 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 72 ஓட்டங்களை மிட்செல் பெற்றுக் கொடுத்தார்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

T20 வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...