ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 40 மற்றும் 41 வது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இப் போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இலங்கை,இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பமாகும்.இப் போட்டி மூன்று அணிகளுக்கு முக்கியமாக அமைந்துள்ளது.அதாவது இப் போட்டியில் ஆப்கானிடம் நியூசிலாந்து தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும் அத்தோடு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும்.மாறாக நியூசிலாந்து வெற்றி அடையும் பட்சத்தில் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.எது எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைய வேண்டும் என இந்திய இரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இன்றைய நாளின் இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டி ஷார்ஜாஹ் மைதானத்தில் இலங்கை,இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.இப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி அடையும் பட்சத்தில் அட்டவணையில் 10 புள்ளிகளை பெறுவதோடு ,“சூப்பர் 12 “ தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்ற அணியாக திகழ்வார்கள்.பாகிஸ்தான் அணி அரையிறுதியில் அவுஸ்திரேலியா அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.