T20 Updates: காயமடைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் தொடரிலிருந்து விலகல்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சூப்பர் 12 போட்டிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரண்டு குழுவிலும் தலா 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது‌.எனினும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலகுவாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில் மற்ற இரு அணிகள் எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையில் சார்ஜாவில் இடம்பெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் காயமடைந்துள்ளார்.இதனால் இத் தொடரின் பாதியில் அவர் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

காயமடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.இதையடுத்தே அவர் இவ் அறிவிப்பை அறிவித்துள்ளார்.இதையடுத்து அவருக்கு பதிலாக ரீஸி டாப்லி அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...