ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 30 மற்றும் 31 வது போட்டி இன்று ( 02) இடம்பெறவுள்ளது.
முதலாவது போட்டியாக தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.இப் போட்டி இலங்கை, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 இற்கு அபுதாபி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதவுள்ளன.இப் போட்டி இலங்கை,இந்திய நேரப்படி இரவு 7.30 க்கு அபுதாபி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.