இன்னும் ஆரம்பிக்கப்படாத 6,7,8 மற்றும் 9ஆம் தரங்களுக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா நிலைமையின் காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து வகுப்புகளுக்குமான கற்றல் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (15) நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.