இந்தியா அனுப்பி வைக்கும் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை- இம்ரான்கான் தெரிவிப்பு!

Date:

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந் நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு இந்தியா மனித நேய உதவிகள் அனுப்ப உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் விமானங்கள் பாகிஸ்தான் வான் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஆப்கானுக்கான மனித நேய உதவிகளை கொண்டு செல்லும் இந்திய விமானங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.இதனிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...