நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவுகிறது.இன்றும் பல பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மி.மீ மேல் அதிகளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாத்தளை, பொலன்னறுவை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ அதிகளவான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்றும் வீசக் கூடும். இதன்போது மக்கள் அவதானமக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம்